நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது!

13 Jul, 2026 | 12:22 PM
image

நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பகுதி

பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, பேராதனை நகருக்கு அருகில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திச் சென்ற 28 வயதுடைய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 400 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், 150 கிராம் ஹெரோயினும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. 

வெரலபட -ஹின்னிஅப்புஹாமி மாவத்தை

வெரலபட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹின்னிஅப்புஹாமி மாவத்தையில் வெரலபட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 119 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34
news-image

மட்டக்களப்பில் 216 கி.மீ. மின்வேலி அமைப்பு:...

2026-08-19 17:24:19
news-image

சிறைச்சாலைகளில் புதிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு...

2026-08-19 17:15:20
news-image

இலங்கையில் இளைஞர்கள் திருமணம் செய்யாமைக்கான காரணத்தை...

2026-08-19 17:13:03