நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி வரை நாட்டில் 68,071 டெங்கு வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் (ஜூலை 12 ) மேலும் 601 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் இந்த ஆண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் 13,293 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை பதிவான மாதாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஜூன் மாதமே மிக அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது. அந்த ஒரே மாதத்தில் மட்டும் 21,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலினால் நாடளாவிய ரீதியில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த டெங்கு பாதிப்பில் மிக உயர்ந்த எண்ணிக்கையை மேல் மாகாணம் பதிவு செய்துள்ளது. இமாகாணத்தில் இதுவரை 36,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே மிக அதிகமாக 14,112 நோயாளர்கள் கம்பஹாவில் பதிவாகியுள்ளனர்.
கம்பஹாவுக்கு அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன.
தற்பொழுது நிலவி வரும் மழைக்கால வானிலையைக் கருத்தில் கொண்டு, வீடுகள், பாடசாலைகள் மற்றும் வேலைத்தலங்களைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கி டெங்கு உறைவிடங்கள் உருவாகாதவாறு தூய்மையாகப் பராமரிக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM