உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நாடுகளின் புதிய பட்டியலில், இலங்கை சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் மோசமடைந்து வரும் வீதிப் போக்குவரத்து நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது.
பிரபல சர்வதேச நுகர்வோர் விலை மற்றும் வாழ்க்கைத்தரத் தரவுத்தளமான 'நம்பியோ' வெளியிட்டுள்ள '2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான நாடுகளின் போக்குவரத்து குறியீடு வெளியிட்டுள்ள முக்கிய விடயங்கள்,
இலங்கை 254.5 புள்ளிகளைப் பெற்று நைஜீரியா மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது.
முதலாம் இடத்தில் நைஜீரியா (320.3), இரண்டாம் இடத்தில் கொஸ்டாரிக்கா,மூன்றாம் இடத்தில் இலங்கை,
4 முதல் 10 ஆம் இடங்களில் பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா, கொலம்பியா ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன.
பயணிகளால் இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்யப்படும் தரவுகளின் அடிப்படையில் நம்பியோ நிறுவனம் இந்தத் தரவரிசையைத் தயாரிக்கிறது.
அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு பின்வரும் காரணைங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு பயணியின் தினசரி ஒரு பக்க பயணத்திற்குச் சராசரியாக எத்தனை நிமிடங்கள் ஆகின்றன என்பதைக் காட்டுகிறது.
ஒரு நபரின் ஒரு பக்கப் பயணம் 25 நிமிடங்களைக் கடக்கும் போது, அவரது விரக்தி மற்றும் அதிருப்தி அதிவேகமாக அதிகரிக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
ஒரு நாட்டின் போக்குவரத்து அமைப்பு எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது. இதில் அதிக புள்ளிகள் பெற்றால், அந்த நாட்டில் பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு குறைவாக இருப்பதையும், மக்கள் சொந்த வாகனங்களை அதிகமாக நம்பியிருப்பதையும் குறிக்கும்.
ஒரு பயணியின் நாளாந்த இருவழிப் பயணத்தால் காற்றில் கலக்கும் கார்பன் டை ஒக்சைட்டின் அளவு கிராம்களில் கணக்கிடப்படுகிறது.
இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் முறையான பொதுப் போக்குவரத்துத் திட்டமிடல் இல்லாமையே இந்த மிக மோசமான தரவரிசைக்கு முதன்மைக் காரணம் எனப் போக்குவரத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM