வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி எண்ணிக்கை 4,490 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்

13 Jul, 2026 | 10:59 AM
image

வெனிசுவேலாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரட்டை பூமியதிர்ச்சியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,490 ஆக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 16,740-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி, வெனிசுவேலாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி பதிவாகின. முதலில் ரிச்டர் அளவுகோலில் 7.2 அளவிலும், மீண்டும் 39 விநாடிகள் இடைவெளியில் 7.5 அளவிலும் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் 1,200-க்கும் மேற்பட்ட பிந்தைய அதிர்வுகள்  பதிவாகி, மக்களிடையே தொடர்ந்தும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இரண்டு பூமியதிர்ச்சியிலும்  பூமியின் மேற்பரப்பிற்கு அருகில், முறையே 22 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பூமியதிர்ச்சி மொரோன் நகரின் மேற்குப் பகுதியிலும், தலைநகர் காரகாஸிலிருந்து சுமார் 168 கிலோமீற்றர் தொலைவிலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 190 கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சமடைந்தனர்.

பூமியதிர்ச்சியின் போது உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியடித்தபடி வெளியே ஓடியதாகவும், பல வீதிகள்  இடிபாடுகளாலும் தூசிப்படலத்தாலும் மூடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேரிடரைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவசர மீட்புக் குழுக்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08