இலங்கையின் அதிக வயதான பெண்மணி தனது 114 ஆவது வயதில் காலமானார்!

Published By: Digital Desk 3

13 Jul, 2026 | 01:46 PM
image

அநுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்தவரும், இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவருமான புஞ்சகே களுமெனிக்கே தனது 114 ஆவது வயதில் காலமானார்.

களுமெனிகே 1912 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்தார். 

இவ் ஆண்டின் தொடக்கத்தில் தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில், அவர் எதிர்பாராதவிதமாக வீழ்ந்து காயமடைந்ததால் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் வரை உயிர் பிழைத்திருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் தற்பொழுது உயிரிழந்துள்ளார்.

களுமெனிகே தனது வாழ்நாளில் பல தலைமுறைகளைக் கண்ட ஒரு வியக்கத்தக்க குடும்பப் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்:

அவருக்கு 12 பிள்ளைகள் உள்ளனர்.

அவரது நீடிக்கப்பட்ட குடும்ப வம்சாவளியில் கொள்ளுப் பேரக் குழந்தைகள் மற்றும் எள்ளுப் பேரக் குழந்தைகள் உட்பட மொத்தம் 325 வாரிசுகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50