சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது ஆரம்பப் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வியின்றி முடிவு

13 Jul, 2026 | 10:21 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கையில் பத்து முன்னணி கால்பந்தாட்டக் கழகங்கள் பங்குபற்றும் முதன்மைவாய்ந்த மற்றும் உயர்மட்ட கால்பந்தாட்டப் போட்டியான சுப்பர் லீக் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமானது.

வென்னப்புவை நியூ யங்ஸ் கழகத்துக்கும் புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டியுடன் தொடங்கிய உயர்மட்ட தொழில்முறை சுப்பர் லீக் கால்பந்தாட்ட ஆரம்ப வைபவத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஒலிம்பியனுமான சுகத் திலக்கரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பிரதி அமைச்சரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்  தலைவர் ஜஸ்வர் உமர் உட்பட சம்மேளன அதிகாரிகள் கண்டிய நடனத்துடன் வரவேற்றனர். 

ஆரம்பப் போட்டியின்போது இலங்கை கால்பந்தாட்டத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

சுப்பர் லீக கால்பந்தாட்டப் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படடது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் இப் போட்டி தொடர் வெற்றிகரமாக நிறைவேறும் என வாழ்த்துவதாகவும் பிரதி அமைச்சர் சுகத் திலக்கரட்ன தெரிவித்தார்.

ஆரம்பப் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வியின்றி முடிவு

வார இறுதியில் நடைபெற்ற ஆரம்பப் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வின்றி முடிவடைந்தன.

வென்னப்புவை நியூ யங்ஸ் கழகத்துக்கும் புளூ ஈக்ள்ஸ் கழகத்தக்கும் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டி ஆரம்பத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாத போதிலும் இடைவெளைக்குப் பின்னர் போட்டியில் விறுவிறுப்பை காணக்கூடியதாக இருந்தது.

நியூ யங்ஸ் கழகத்தில் நான்கு வெளிநாட்டவர்களும் ப்ளூ ஈக்ள்ஸ் கழகத்தில் ஒரு வெளிநாட்டு    வீரரும் இடம்பெற்றனர்.

இப் போட்டியின் 50ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் சார்பாக ரமேஷ் மெண்டிஸ் கோல்போட்டு அணியை முன்னிலையில் இட்டார். இதன் மூலம் இந்த வருட சுப்பர் லிக்கில் முதலாவது கோலைப் போட்டவர் என்ற பெருமையை ரமேஷ் மெண்டிஸ் பெற்றார்.

போட்டியின் 74ஆவது நிமிடத்தில் புளூ ஈக்ள்ஸ் சார்பாக உதார தேஷான் கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் வெற்றி கோலை போடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.

கலம்போ எப்சி எதிர் டிஃபெண்டர்ஸ்

கலம்போ எவ்சி, டிஃபெண்டர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் ஞாயற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவித்த இப் போட்டியில் இரண்டு அணியினரும் கோல் போட கிடைத்த பல வாய்ப்புகளை கோட்டை விட்டனர்.

இறுதியில் எந்த அணியினாலும் கோல் போடப்படாமல் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் சுப்பர் லீக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என கால்பந்தாட்டக் கழகங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 சுப்பர் லிக்  போட்டியில் நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார், புளூ ஈக்ள்ஸ், கலம்போ எவ்சி, டிஃபெண்டர்ஸ், வென்னப்புவை நியூ யங்ஸ், கொட்டாஞ்சேனை ரட்னம், கொட்டாஞ்செனை றினோன், பேருவளை ரெட் ஸ்டார், சீ ஹோக்ஸ், நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் ஆகிய பத்து கழகங்கள் பங்குபற்றுகின்றன.

இந்த வருடம் சுப்பர் லிக் போட்டிகள் யாவும் கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெறும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

16 வயதின் கீழ் பாடசாலைகள் கால்பந்தாட்டம்...

2026-08-19 19:48:07
news-image

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இந்தியா 165...

2026-08-19 15:09:56
news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56