இன்றைய சூழலில் காலையில் 9 மணிக்கு அலுவலகத்தில் இருக்கவேண்டும் என்றால் காலையில் 7 மணிக்கு சாப்பிடவேண்டியதாகயிருக்கிறது. அதன் பின் போக்குவரத்து நெரிசலில் பயணித்து சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரவேண்டும். இந்நிலையில் பெரும்பாலானவர்கள் காலை உணவை 7 மணிக்கு எடுக்காமல், காலி வயிற்றுடன் பசியுடன் பயணித்து, அலுவலகத்திற்கு வந்த பின் சோர்வாக இருப்பதால் சிறிதளவு காலை உணவை எடுத்துக் கொள்வர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்பு வரக்கூடும் என்று எச்சரிக்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. அத்துடன் காலையில் சத்தற்ற உணவை சாப்பிடுவர்களும் பாதிக்கப்படக்கூடும் என்று அறிவுறுத்துகிறது அந்த ஆய்வு.

இரவு உணவை 8 மணிக்குள்ளாக சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு உறங்கச் செல்வபவர்கள், காலையில் எழுந்து அலுவலகத்திற்கு செல்லும் முன் அல்லது பணிக்கு செல்லும் முன் கட்டாயமாக சத்து மிக்க காலை உணவை சாப்பிடவேண்டும். அலட்சியப்படுத்தினால் அதிரோஸ்கிளிரோஸிஸ் என்ற பாதிப்பு இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் தமனிகளில் உருவாகி, இதய பாதிப்பு மற்றும் இதய செயலிழப்பிற்கு காரணமாகிவிடும். காலையில் நீங்கள் உணவு எடுத்துக் கொண்டால் இந்நிலை ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்றும், காலையில் உணவை எடுத்துக் கொள்ள தவறினால் இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் தமனிகளில் தீங்கு விளைவிக்கும் புரதச்சத்து, தேக்கமடைந்து இரத்த ஓட்டத்தை தடை ஏற்படுத்தி இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

அதனால் காலை உணவை ஒரு போதும் தவிர்க்காதீர்கள். அத்துடன் காலையில் சாப்பிடும் போது சத்து அதிகமுள்ள முட்டை, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டும். இதன் காரணமாக உடலுக்கு அன்றைய திகதிக்கு தேவைப்படும் புரதசத்துகள், இயல்பான அளவை விட 5 சதவீதம் கூடுதலாக கிடைத்து இதயத்தின் ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்கிறார்கள்.

டொக்டர் ஹயாஸ் அக்பர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்