டெங்கு நோய் பரவல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (13) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவியதை அடுத்து, கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்கலைக்கழகம் சுமார் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறித்துக் கருத்து வெளியிட்ட அதன் பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட, பல்கலைக்கழக வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதில் மாணவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"டெங்கு பரவல் காரணமாகவே நாம் தற்காலிகமாகக் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தோம். இது உங்களுடைய பல்கலைக்கழகம். அரசாங்கத்தின் ஆதரவுடன் நாம் தற்போது பல்கலைக்கழக வளாகத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்தி, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளோம். கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்களது வகுப்பறைகள் மற்றும் சூழலைத் தூய்மையாகப் பராமரிப்பதோடு, கழிவுகளைச் சரியான முறையில் அகற்றிப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இதே காலப்பகுதியில் டெங்கு நோய் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 47 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அக்குறிப்பிட்ட பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM