காலநிலை மாற்றத்தால் தித்வா புயல் போன்ற பேரழிவுகள் அதிகரிக்கலாம் – அனர்த்த முகாமைத்துவ மையம்

Published By: Vishnu

13 Jul, 2026 | 05:57 AM
image

(இராஜதுரை ஹஷான்)

உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே பேரனர்த்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும். மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொடுவேகொட கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தித்வா புயல் தாக்கம் ஏற்பட்ட போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 188 பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. தித்வா போன்ற ஒரு யானையை சிரட்டை போன்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்கொண்டது என்றே குறிப்பிட வேண்டும்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 24 மணித்தியால சேவைக்கான அவசர தொலைபேசி கட்டமைப்பு காணப்படுகிறது. இந்த அவசர சேவையில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான வசதிகள் ஏதும் கிடையாது. அவர்கள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தான் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுகிறார்கள்.

மாவட்ட மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு ஒன்று உள்ளது.அதில் எழுதுவினைஞர்கள் ஐந்து பேர், பிரதி பணிப்பாளர் ஒருவர், உதவியாளர் மற்றும் சாரதி ஒருவர் உள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மாலை 04.30 மணிக்கு பணியை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.

குறித்த மாவட்டத்தில் 04.30 மணிக்கு பிறகு ஏதேனும் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பணிப்பாளரை அழைப்பதற்கு நீண்ட நேரம் செல்கிறது. மாவட்ட மட்டத்திலான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகுடன் தொடர்புக் கொள்வது சவால்மிக்கதாக காணப்படுகிறது.

அதேபோல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு போதுமான ஆளனி வளங்கள் கிடையாது. காணப்படும் வெற்றிடங்களுக்கு உடன் நியமனங்களை வழங்க வேண்டும். மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58