நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து சேவைகள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Published By: Vishnu

12 Jul, 2026 | 09:48 PM
image

நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களுக்கும் சிறப்பு போக்குவரத்துச் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக , நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் தெரிவிக்கையில், 

வடக்குக்கான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , நல்லூர் திருவிழா மற்றும்  மடு திருவிழாவிற்காகச் சிறப்பு புகையிரத சேவை மற்றும் பேருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம். 

மலையக பகுதிகளில் புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளதால், அவற்றின் புனரமைப்புப் பணிகளுக்காகச் சில புகையிரத இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. 

அதற்காக 4 -  5 புகையிரத இயந்திரங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. 

வரகாபொல பகுதியில் ஒரு புகையிரத இயந்திரம் இன்னமும் மீட்க முடியாமல் சிக்கியுள்ளது. இதனால் புகையிரத சேவைக்கு தேவையான புகையிரத இயந்திரங்கள் இல்லாத நிலைமை காணப்படுகிறது. இதொரு தற்காலிகப் பிரச்சினை .

இவ்வாறான நெருக்கடிகள் இருந்தாலும், நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களுக்கும் நிச்சயமாக சிறப்பு சேவைகளை வழங்குவோம் அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஒரே ஒரு புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையத்தில் , அனைத்து புகையிரதங்களையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலருடன் கலந்துரையாடியுள்ளேன். 

புகையிரத திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துரித கெதியில் நடைபெற்று வருகிறது. அதனால் , முற்பதிவு பிரச்சனைகள் வராது என நினைக்கிறேன். 

பிற புகையிரத நேர அட்டவணையை கருத்தில் கொண்டு, மாங்குளத்தில் புகையிரத்தை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானை – மனித மோதலில் மட்டக்களப்பு...

2026-08-19 14:18:14
news-image

இந்திய "கிராண்ட் மாஸ்டர்" ஆகாஷ் கணேசன்...

2026-08-19 14:21:24
news-image

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.3,900...

2026-08-19 14:12:41
news-image

வத்தேகம சிறுமி உயிரிழந்ததாக பரவும் தகவல்கள்...

2026-08-19 14:14:32
news-image

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்...

2026-08-19 13:33:52
news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45