அரசியல் பழிவாங்கல் எதிர்காலத்தில் மென்மேலும் தீவிரமடையலாம் எதிர்க்கட்சிகளின் சகல உறுப்பினர்களும் ஒன்றுப்பட வேண்டும் - தயாசிறி ஜயசேகர

Published By: Vishnu

12 Jul, 2026 | 09:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அது இன்றும் தீவிரமடையலாம். ஆகவே எதிர்கட்சிகளின் சகல தரப்பினரும் தற்போது ஒன்றிணைய வேண்டும். பேச்சு சுதந்திரத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகல் நகரில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் உட்பட பொதுமக்களையும் ஆட்சியாளர்கள் விரோதிகளாகவே பார்க்கிறார்கள்.

அரசியலில் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் அரச நிதி மோசடி சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமை சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகிய மூன்று சட்டங்களால் இன்று இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அது இன்றும் தீவிரமடையலாம். ஆகவே எதிர்கட்சிகளின் சகல தரப்பினரும் தற்போது ஒன்றிணைய வேண்டும். பேச்சு சுதந்திரத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே ஆகவே மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.

ஆளும் தரப்பில் உள்ளவர்களின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு சட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா முன்கூட்டியதாகவே குறிப்பிட்டு விட்டார்.

இந்த ஆணைக்குழு ஊடாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் விடுவித்து விடுதலையாக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான கருத்துக்கள் சுயாதீன நீதிபதிகளின் பணிகளையும் அவமதிப்பதாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50