டெங்கு அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு

Published By: Vishnu

12 Jul, 2026 | 09:39 PM
image

(செ.கவிஷனா)

கொழும்பு கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் 30 மாணவர்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை (12) மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, மாணவர்களினதும் ஊழியர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அதன் வளாகத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்தும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (12) நாள் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தினால் வழிநடத்தப்பட்ட இந்த விசேட வேலைத் திட்டத்தின் போது, கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக வளாகத்தை தூய்மைப்படுத்துதல், புகை விசிறல் மற்றும் நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து அழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் தூய்மைப்பணிப் பொதுநலச் சேவையில் கொழும்பு மாநகர சபையின் பொரள்ளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து கூட்டுப் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.3,900...

2026-08-19 14:12:41
news-image

வத்தேகம சிறுமி உயிரிழந்ததாக பரவும் தகவல்கள்...

2026-08-19 14:02:58
news-image

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்...

2026-08-19 13:33:52
news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48