தங்காலை கடற்கரையில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

Published By: Vishnu

12 Jul, 2026 | 09:33 PM
image

தங்காலை கடற்பகுதியில் மிதந்துக் கொண்டிருந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரது சடலம் சனிக்கிழமை (11) பொலிஸாரால் மீ்ட்கப்பட்டது.

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் அளித்திருந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் தங்காலை, கொடெல்லவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞர் கடந்த 9 ஆம் திகதி தங்காலை, மாவெல்ல மஹகலாகாவ கடற்கரைப் பகுதியில் தூண்டில் ஒன்றின் உதவியுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கடல் அலையில் சிக்கி அள்ளுண்டு செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காகப் பிரதேசவாசிகள், பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்த போதிலும், குறித்த இளைஞரை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தது.

எனினும், மாவெல்ல கடற்பரப்பில் குறித்த இளைஞரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதை சனிக்கிழமை (11) பிற்பகல் வேளையில் அவதானித்த மீனவர்கள், அதனைப் படகொன்றின் மூலம் கரைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த விபத்து மற்றும் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50