இலங்கை சொகுசு பேருந்து சங்கத்தினால் 'மாவதே அபிமன் 2026' தேசிய விருது விழா பிரகடனம் ; பேருந்து தொழில்துறையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை

12 Jul, 2026 | 05:28 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

பேருந்து தொழில்துறையை, சர்வதேச தரத்திலான ஒரு உன்னத தொழில்முறையாக மாற்றுவதற்கும், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஊழியர் சமூகத்தினரை தொழில்முறை ரீதியாக மதிப்பதற்கும் 'மாவதே அபிமன் 2026' தேசிய விருது விழா பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நுகேகொட லைசியம் வளாகத்தில் இலங்கை சொகுசு பேருந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை சொகுசு பேருந்து சங்கத்தின் தலைவர் நிகித கிரேரு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

பேருந்து தொழில்துறையை, சர்வதேச தரத்திலான ஒரு உன்னத தொழில்முறையாக மாற்றுவதற்கும், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஊழியர் சமூகத்தினரை தொழில்முறை ரீதியாக மதிப்பதற்குமே இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை விருது வழங்கும் விழா கொழும்பு சிட்டி ஒப் ட்ரீம்ஸ் வளாகத்தில் சர்வதேச தரத்துக்கு அமைய மிகவும் கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பேருந்து தொழில்துறையை கற்றறிந்த இளம் தலைமுறையினர் பெருமையுடன் கைகொடுத்து முன்னேற்றக்கூடிய ஒரு மதிப்புமிக்க வணிகமாக கட்டியெழுப்புவதற்கே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

தற்போது சொகுசு பேருந்து ஒன்றின் பெறுமதி 5 முதல் 6 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், பொது போக்குவரத்தை முன்னெடுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் சமூக அந்தஸ்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த விருது விழாவில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை ஆகிய இரு பிரிவுகளையும் சேர்ந்த சொகுசு பேருந்துகளுக்கு சமமான முறையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்ப முறைகள் மூலம் பயணிகள் சேவைகளை மேலும் டிஜிட்டல் மயமாக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

இதற்கான வெற்றியாளர்கள் பேராசிரியை ரேணுகா ஹெரத், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் அஜீசி கருணாரத்ன, மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதேச மேலாளர் பிரசன்ன குரே, மேல் மாகாண வீதி போக்குவரத்து பயிற்சிப் பள்ளியின் அதிபர் என்.டி.என். கொரே மற்றும் வாகனத்துறை நிபுணர் சமீர டி சில்வா ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஓட்டுநர்களின் வீதி ஒழுக்கம், நடத்துநர்களின் நற்பண்புகள், பேருந்துகளின் தொழில்நுட்ப தரம் மற்றும் பயணிகளின் வாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவதுடன், முதற்கட்ட நேர்முகத்தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தரவு பகுப்பாய்வு அறிவை பயன்படுத்தி, எதிர்கால பொது போக்குவரத்து முதலீடுகள் மற்றும் சூழல்சார் சுற்றுலா இலக்குகளை திட்டமிடவுள்ளோம். இந்த விருது விழாவுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் உள்ள புள்ளிகள் இலங்கையின் பிரதான பேருந்து நிலையங்களின் வலையமைப்பையும், அதன் கீழ் உள்ள மனித உருவம் போக்குவரத்து துறையின் கூட்டு உழைப்பையும் குறியீடு செய்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02