ஓமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்: 10 இந்தியர்கள் மீட்பு, ஒருவர் மாயம்

Published By: Digital Desk 3

13 Jul, 2026 | 12:29 PM
image

ஓமான்  கடற்கரை அருகே ஜி.எப்.எஸ் கேலக்ஸி என்கிற வணிக கப்பலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ஒருவரை மட்டும் காணவில்லை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

"ஓமானில் உள்ள இந்திய தூதரகம் அண்மைய நிகழ்வுகளைக் உன்னிப்பிக்காக கண்காணித்தும் ஒமான் அதிகாரிகள் உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கியும் வருகிறது," என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், "இந்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கியதற்காக ஓமான் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகவும்." அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தப் பிராந்தியத்தில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது. பிராந்தியத்தில் உள்ள பதற்றங்களை உடனடியாக தணிக்க வேண்டும் எனவும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்த தற்போதைய பேச்சுவார்த்தைகள் ஒரு இராஜ்ஜிய தீர்வை நோக்கி நகர வேண்டும் எனவும் இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது." என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின்படி, சைப்ரஸ் கொடி ஏந்திய ஜி.எப்.எஸ் கேலக்ஸி வணிக கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் தாக்கப்பட்டது. பணியாளர்களில் ஒருவரைக் காணவில்லை என சென்ட்காம் தெரிவித்துள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் என்ஜின் அறைக்கு ஏற்பட்ட பலத்த சேதத்தால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில்ஈரானில் 140 இராணுவ நிலைகளை இலக்கு வைத்ததாக சென்ட்காம் தெரிவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08
news-image

இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில்...

2026-08-17 11:35:34
news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40