(இராஜதுரை ஹஷான்)
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் மிகவும் கீழ்த்தரமான மற்றும் வெட்கக்கேடான முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டும்.ஏனெனில் இது நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடியாகும்.அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோற்கடிக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை சுட்டிக்காட்டி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் மிகவும் கீழ்த்தரமான மற்றும் வெட்கக்கேடான முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் மிகவும் கீழ்த்தரமான மற்றும் வெட்கக்கேடான செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்து உருவாகியுள்ளதை நாம் அவதானிக்கிறோம். ஒரு கட்சி என்ற ரீதியில், இந்த கீழ்த்தரமான முயற்சிக்கு நாம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம், ஏனெனில் இது நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடியாகும்.
இந்த முடிவை எதிர்க்க வேண்டும் என்பதே நீதிபதிகள் சங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமாகும். அரசாங்கத்தின் இந்த சதி மற்றும் ஜனநாயக விரோத முயற்சிக்கு எதிராக நாட்டின் நீதிபதிகளே குரல் எழுப்புவது, ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நாடாக மிகவும் பாரட்டத்தக்க மற்றும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
தற்போதைய அரசாங்கம் அரசியல் தேவைகளின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு மேற்கொள்ளும் இந்த வெட்கக்கேடான முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து குரல் எழுப்ப வேண்டும் என்று கடந்த வாரம் எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அவசர கவனம் செலுத்தப்படும் என நான் நம்புகிறேன்.
நமது தாய்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில், அதற்கு எதிராக என்னென்ன அச்சுறுத்தல்களும் தாக்கங்களும் ஏற்பட்டாலும், அதற்காக முன்நிற்போம் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அதிகபட்ச அர்ப்பணிப்பைச் செய்வோம் என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM