சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில் முறியடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜன்டீனா

12 Jul, 2026 | 03:03 PM
image

(நெவில் அன்தனி)

கன்சாஸ் சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற பீபா உலகக் கிண்ண கடைசி கால் இறுதிப் போட்டியில் மேலதிக நேரம் உட்பட மொத்தம் 48 நிமிடங்கள் 10 வீரர்களுடன் விளையாடிய சுவிட்ஸர்லாந்தை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஆர்ஜன்டீனா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய இப் போட்டியில் மேலதிக நேரத்தில் போடப்பட்ட இரண்டு கோல்களே ஆர்ஜன்டீனாவை வெற்றிபெறச் செய்தது.

இந்த உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் மூன்றாவது நேரடித் தடவையாக ஆர்ஜன்டீனா கடும் சவாலை எதிர்கொண்டது.

காபோ வேர்ட்டே, எகிப்து ஆகிய அணிகளிடமும் ஆர்ஜன்டீனா சிரமத்துக்கு மத்தியிலேயே வெற்றிபெற்றிருந்தது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி உயர்த்தி பரிமாறிய பந்தை நோக்கி தாவிய அலெக்ஸிஸ்  மெக் அலிஸ்டர் தனது தலையால் முட்டி அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

அதன் பின்னர் 71ஆவது நிமிடம் வரை இரண்டு அணிகளினதும் கோல்காப்பாளர்கள் மிகத் திறமையாக செயற்பட்டு கோல் போடப்படுவதைத் தடுத்தனர்.

போட்டியின் 67ஆவது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்து வீரர் டான் எண்டோய் மிகவும் சாமர்த்தியமாக பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.

போட்டியின் 72ஆவது நிமிடத்தில் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பைப் பெற்ற கள மத்திஸ்தர், ப்றீல் எம்போலோவுக்கு 2ஆவது மஞ்சள் அட்டையுன் சிவப்பு அட்டையைக் காட்டி அரங்கிலிருந்து வேளியேற்றினார்.

தொடர்ந்து 10 வீரர்களுடன் விளையாடிய சுவிட்ஸர்லாந்து இலகுவாக ஆட்டத்தை விட்டுக்கொடுக்கவில்லை.

போட்டி முடிவடைய சொற்ப நேரம் இருந்தபோது லியோனல் மெஸ்ஸியின் கோல் போடும் முயற்சி கைகூடவில்லை.

அதன் பின்னர் ஆட்டம் மேலதிக நேரத்திற்குள் சென்றது.

மேலதிக நேரத்தின் 112ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸும் 120+1ஆவது நிமிடத்தில் லவ்டாரோ மாட்டினெஸும் கோல்களைப் போட்டு ஆர்ஜன்டீனாவுக்கு அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

இந்த வெற்றியை அடுத்து எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அரை இறுதியில் இங்கிலாந்தை ஆர்ஜன்டீனா எதிர்த்தாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44