கல்முனை விகாரை வீதியில் சட்டவிரோதமாக அலுமாரியில் கைதுத்துப்பாக்கி வைத்திருந்த இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து  இருந்து வாள் மற்றும் மதுபானப் போத்தல்களை கைப்பற்றியுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்துவருவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சம்பவதினம் மாலை 6 மணியளவில் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது சட்டவிரோதமாக வைத்திருந்த 4 முழுப்போத்தல் மற்றும் 11 கால்போத்தல் மதுபானப் போத்தல்களை மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து சோதனையின் போது அலுமாரியில் மறைத்து வைத்திருந்து கைத்துப்பாக்கி ஒன்றையும் வாள் ஒன்றையும் மீட்டதையடுத்து வீட்டு உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.