(ஆர்.ராம்)
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள் இடையே அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆறு தமிழ் பேசும் கட்சிகளிடையிலான புரிந்துணர்வு இன்றையதினம் கொழும்பு ரேணுகா ஹோட்டலில் பிற்பகல் ஒருமணிக்கு நடைபெறவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளிடையே குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, குறித்த ஆறு கட்சிகளையும் இணைக்கும் முகமாக மிக இரகசியமாக சுமந்திரனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் முக்கிய சந்திப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் முதன்மையான விடயங்கள் அடையாளம் காணப்பட்டு அதுதொடர்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு தற்போது ஆறு கட்சிகளின் இணக்கத்துடன் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆவணத்தில் உள்ள விடயங்களின் அடிப்படையில் இன்று கலந்துரையாடல் நடத்தப்பட்டு இன்றையதினம் மேற்படி ஆறு கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு இறுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசு, எதிரணி, உட்பட பல்தரப்புகளுடன், தமிழ் N பேசும் பிரச்சினைகளை முன்னிறுத்தி, கலந்துரையாடி, சிங்கள சகோதரர்களுடன் சமத்துவமாக, ஒரே நாட்டில் வாழ வழி தேடுவதே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு இதனை இன்றையதினம் நாம் வலியுறுத்துவோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனேகணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM