பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று அரை இறுதிக்கு சென்றது இங்கிலாந்து

12 Jul, 2026 | 02:17 PM
image

(நெவில் அன்தனி)

மியாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நோர்வேக்கு எதிரான பீபா உலகக் கிண்ண 3ஆவது கால் இறுதிப் போட்டியில் ஒரு கோல் பின்னிலையில் இருந்த இங்கிலாந்து,  ஜூட் பெலிங்ஹாம் போட்ட இரண்டு கோல்களின் உதவியுடன் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

நோர்வே சார்பாக அண்ட்றியாஸ் ஷெல்டருப் 36ஆவது நிமிடத்தில் போட்ட கோலைத் தொடர்ந்து இடைவேளைக்கு முன்னர் வழங்கப்பட்ட உபாதையீடு நேரத்தில் (45+2 நி.) பெலிங்ஹாம் கோல் நிலையை சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து 90 நிமிடங்கள் முடிவில் எந்த அணியும் வெற்றி கோலை போடாததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்தில் 93ஆவது நிமிடத்தில் பெலிங்ஹாம் தனது இரண்டாவது கோலை போட்டு இங்கிலாந்தை வெற்றி அடையச் செய்தார்.

இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டன. ஆனால், நேரம் செல்லசெல்ல நோர்வே கட்டுப்பாட்டுடன் விளையாடி ஆட்டத்தின் பிடியை தனதாக்கிக்கொண்டது.

ஏர்லிங் ஹாலண்டின் ஒரு முயற்சி பலனளிக்காத நிலையில் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் அண்ட்றியாஸ் உதைத்த பந்து வலது கோல் கம்பத்தில் பட்டு கோலினுள் புகுந்தது.

முதலாவது பகுதியின் உபாதையீடு நேரத்தில் இடது புறத்திலிருந்து அன்தனி கோர்டன் தாழ்வாகப் பகிர்ந்த பந்தைப் பெற்றுக்கொண்ட பெலிங்ஹாம் சற்று தூரம் பந்தை நகர்த்தி வலதுபுறமாக கோலினுள் செலுத்தி இங்கிலாந்து சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

சற்று நேரத்தில் ஹெரி கேன் போட்ட கோல் ஒவ்சைட் நிலையிலிருந்து பெறப்பட்டதாக மத்தியஸ்திரினால் நிராகரிக்கப்பட்டது.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டத்தில் சூடு பிடித்தது. இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்தன.

போட்டியின் 60ஆவது நிமிடத்தில் டோர்ப்ஜோன் ஹெஜெம் அடித்த கோல், ஏர்லிங் ஹாலண்டின்  விதிமீறலால் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 90 நிமிடங்கள் நிறைவில் கோல் நிலை சமநிலையில் இருந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரம் வழங்கி 3 நிமிடங்கள் ஆன நிலையில் பெலிங்ஹாம் சாதுரியமாக செயற்பட்டு கோல் போட்டு இங்கிலாந்தை முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் மேலதிக நேரத்தின் எஞ்சிய 17 நிமிடங்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.

இறுதியில் இங்கிலாந்து 2 - 1 என வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44