(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11) னிக்கிழமை பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பண்டாரியா வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக சென்ற போது வயலில் இருந்த பாம்பு தீண்டியது.
பின்னர் அவரை மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM