நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ. 20 இலட்சத்திற்கும் மேல் இழப்பீடு வழங்க பரிசீலனை!

12 Jul, 2026 | 09:23 AM
image

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 500,000 ரூபா ஆரம்பகட்ட இழப்பீடு மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 மில்லியனுக்கும்  அதிக தொகையை மொத்த இழப்பீடாக வழங்குவது குறித்து திணைக்களம் தற்போது பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிச் சடங்குச் செலவுகள் அனைத்தையும் சிறைச்சாலைகள் திணைக்களமே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இழப்பீடு வழங்குவது குறித்தும் திணைக்களம் அவதானம் செலுத்தி வருகிறது.

காயமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31