(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிப்பது நிறைவேற்றுத்துறையால் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் இலஞ்சம் அல்லது பரிசாகவே கருதப்படும்.நீதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும்.ஆகவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (11) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது. ஆனால் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் புதிய யாப்புருவாக்கத்துக்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளைக் கூட முன்னெடுக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் தமக்கு ஏற்றாட்போல் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டு வந்து பிரதம நீதியரசர் உட்பட உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது.இதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியானதன் பின்னர் தற்போது நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிப்பது நிறைவேற்றுத்துறையால் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் இலஞ்சம் அல்லது பரிசாகவே கருதப்படும்.இது முறையற்றது.
நீதிபதிகளின் பதவி காலத்தை அதிகரிப்பதாயின் தற்போது சேவையில் உள்ளவர்களின் பதவி காலத்தை அதிகரிக்க கூடாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஊடாகவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக நீதிமன்ற சமூகம் மற்றும் நீதிபதிகள் சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.இது வரவேற்கத்தக்கது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் அவர் பதவி விலகி சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவரை பதவி வைத்துக் கொண்டு சுயாதீன விசாரணைகள் இடம்பெறும் என்று நம்பிக்கை கொள்ள முடியாது.
நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது சிறந்தது. அதேபோல் ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றப்பிரேரணை கொண்டு வருவது அத்தியாவசியமானது. உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பாமல் அவர் தான் நீதித்துறையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM