(நமது நிருபர்)
நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிவான் பசன் அமரசேன இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிச்சேவை சங்கத்தின் செயலாளரால் நேற்றைய தினம் கூட்டப்பட்ட சங்கத்தின் விசேட பொதுக்குழு கூட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்தே நீதிபதி பசன் அமரசேன தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான விவகாரத்தில் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, சங்கத்தின் செயற்குழு இந்த விசேட பொதுக்குழு கூட்டத்தைக் கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடத்தத் தீர்மானித்திருந்தது.
நீதிபதி பசன் அமரசேனவினால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரிமாற்றப்படுகின்ற நிலையில், அதில் அவர் தனது இராஜினமாவை உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதுடன், தனது இந்த முடிவிற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.
இதற்கிடையில், தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளரான நீதிபதி சுரங்க முனசிங்கவினால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பரிமாற்றப்படுகிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM