(நமது நிருபர்)
வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் கடந்த ஜுன் மாதத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
குறித்த புள்ளிவிபரங்களின்படி, வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது. கடந்த மே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு வருமான 847 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் பெறப்பட்ட வருவாயானது 152 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் கணிசமாகக் குறைந்துள்ளது.
இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
எவ்வாறாயினும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது. அதேநேரம், 2026 ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுலாத்துறை மூலம் 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது.
இருப்பினும், 2025 ஜூன் மாதத்திற்கான சுற்றுலா வருவாய் 169.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM