அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விசனம்

11 Jul, 2026 | 06:06 PM
image

(எம்.மனோசித்ரா)

முந்தைய அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் மக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறி, நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜனநாயக நாட்டின் தூண்களாக விளங்கும் சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகங்களை அழித்துவிட்டு தற்போதைய அரசு சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்கிறது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினாலேயே, பாராளுமன்றக் குழுக்களில் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான எதிர்க்கட்சியின் உரிமையை அரசு தடுத்துள்ளது.

விவசாயிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு 137 ரூபா எனத் தெரிந்தும், அதன் உறுதி விலையை 120 ரூபாவுக்கும் குறைவாகக் குறைத்து விவசாயிகளுக்குப் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான பராடே சட்டம் தேர்தல் இலக்குகளுக்காக மட்டுமே தற்காலிகமாக நீக்கப்பட்டது. ஆனால், அதற்கான உண்மையான சலுகைகள் நடுத்தர மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்காமல் பெரும் கோடீஸ்வரர்களுக்கே சென்றடைகின்றன.

மேலும், உச்ச நீதிமன்றங்களுக்குப் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படாத ஒரு சூழலில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். இவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும். நாட்டைச் சரியான பாதையில் கட்டியெழுப்பும் ஆளுமை எமது கட்சியிடமே உள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50