லவ் ஓ லவ் - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு: ஜினிமா மீடியா என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ்
நடிகர்கள்: பவிஷ் நாராயண், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா மற்றும் பலர்
இயக்கம் : மகேஷ் ராஜேந்திரன்
மதிப்பீடு : 2.5/5
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகமான நடிகர் பவிஷ் நாராயணன்- காதல் கதை- விளம்பரப்படுத்துதலில் நிறைவு- என பல அம்சங்களால் ஈர்க்கப்பட்டு, இப்படத்தை காண்பதற்காக படமாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு 'லவ் மீற்றர்' உயர்ந்ததா? கீழிறங்கியதா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இளைஞன் ரகுவரன் ( பவிஷ் நாராயண்) பெற்றோர்கள் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறான். இந்திய மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாயை ஊதியமாக பெற்று தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ரகுவரனுக்கு, அவந்திகா ( நாக துர்கா) என்ற இளம் பெண் மீது காதல் வருகிறது. இருவரும் சந்தித்து 'டேட்டிங்' செய்ய ஆசைப்படுகிறார்கள். முதல் சந்திப்பிலேயே எமக்கு சொகுசான துவி சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து சாலையில் பயணிக்க வேண்டும் என்பதே ஆசை எனத் தெரிவிக்க.. தன் சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார் ரகுவரன். இவர்களின் காதல் ...பல தனியார் நிறுவனங்களின் கடன் அட்டை உதவியுடன் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கிறது. அதன் பிறகு கடன் கொடுத்தவர்கள் ரகுவரனுக்கு நெருக்கடியும், அழுத்தமும் தர... மற்றொரு பக்கம் காதலி தன் விருப்பத்தை உயர்த்தி கொண்டே போக.. அழுத்தம் தாங்காமல் காதலின் மீது 'கை'யளவு வன்முறையை கையாள.. அதற்கு மாதர் சங்கம் சாட்சியாகி விட.. விடயம் மாதர் சங்கம் மூலமாக காவல்துறைக்கு செல்கிறது. காவல் நிலையத்தில் காதலர்களின் பெற்றோர்களும் வர.. ரகுவரனின் நிலை மேலும் சிக்கலாகிறது. இதன் காரணமாக ரகுவரனின் பெற்றோர்கள் அவமானத்தை எதிர்கொள்கிறார்கள். ரகுவரனுக்கு வேலையும் பறிபோகிறது. இந்தத் தருணத்தில் தனக்காக பழியை ஏற்றுக்கொண்ட ரகுவரனை பிரிய மனம் இல்லாமல் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என அவந்திகா தீர்மானிக்கிறார். ஆனால் இதற்கு ரகுவரன் ஒரு நிபந்தனையை விதிக்கிறார். அந்த நிபந்தனை என்ன? அந்த நிபந்தனையை அவந்திகா நிறைவேற்றினார்? இல்லையா? காதலர்கள் ஒன்றிணைந்தார்களா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
'நான்கு வருடங்களாக ஒரு காதலனாக- தான் செய்ததை, காதலி தனக்கு நான்கு மாதங்கள் செய்திட வேண்டும். அப்படி செய்துவிட்டால் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும்.. அவரால் அது நிறைவேற்ற முடியாமல் போனால் லவ் லிவிங் லெட்டர் கடிதத்தை கொடுத்து விட்டு, விலகிட வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார். இந்த நிபந்தனையை ஏற்று அவந்திகா ஆண்களின் உலகத்தில் பயணப்படுவது கலகல.
முதல் பகுதியில் காதல்- காதலர்கள்- உற்சாகம் -கொண்டாட்டம் -என வழக்கமாக பார்வையாளர்கள் யூகிக்கக்கூடிய காட்சிகள் வரிசை கட்டி வருவதால்... எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் இரண்டாம் பாதியில் காதலர்களுக்கு இடையேயான உணர்வு பூர்வமான காட்சிகள்- உரையாடல்கள் -ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. குறிப்பாக 'வேலையும் சம்பாத்தியமும் பெண்களுக்கு உரிமை. ஆனால் ஆணுக்கு அது கடமை' எனும் உரையாடலும், 'ஆணும் பெண்ணும் சமம் என்று ஒரு ஆண் சொல்வதே ஆணாதிக்கம் தான்' என்ற வசனமும் கவனத்தை ஈர்க்கிறது.
ஒற்றை பெற்றோர்களின் அவதானிப்பில் வளரும் பெண் பிள்ளைகளின் சமூக பார்வையும்... தாய், தந்தை, தங்கை என குடும்ப உறுப்பினர்களுடன் பொறுப்புணர்வுடன் வளரும் ஆண் பிள்ளைகளின் சமூகப் பார்வையும்... வேறு வேறு என இயக்குநர் நேர்த்தியாக விவரித்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் நட்சத்திர உணவகங்களில் விருந்துகளை ஒருங்கிணைக்கும் நபர்கள் - அதில் வீணடிக்கப்படும் உணவு குறித்த காட்சி... அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
ரகுவரனாக நடித்திருக்கும் பவிஷ் நாராயணன் பல காட்சிகளில் தனுஷை இமிடேட் செய்து நடித்திருக்கிறார். இது தொடர்ந்தால்... பவிஷின் தனித்துவம் திரையில் ஜொலிக்காமல் போய்விடும். நடனம் -எக்சன்- எமோஷனல்- சென்டிமென்ட் -கொமடி- என எல்லா ஏரியாவிலும் பவிஷ் தான் திறமையை காண்பித்திருக்கிறார்.
அவந்திகா கதாபாத்திரத்திற்கு தெலுங்கு நடிகை நாகதுர்கா எந்த கோணத்திலும் பொருத்தமாக இல்லை என்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. வட சென்னையை சார்ந்த நடுத்தர வர்க்கத்து பெண் என்ற ஒரே காரணத்திற்காக இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும்... க்ளோசப் காட்சிகளில் கண்களில் சோர்வும்.. சுருக்கமும் தெரிவது வெகுஜன ரசிகர்களுக்கு ஏற்புடையதல்ல. தமிழ் மண்ணிற்கு ஏற்ற முகமாகவும் இல்லை. ஆனால் அறிமுக நடிகை என்பதால் இனி வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரத்தை தெரிவு செய்து நடிக்கலாம். ஆனால் நடன காட்சிகளில் மட்டும் ஓஹோ.
கே எஸ் ரவிக்குமார் - செல்வராகவன்- வனிதா விஜயகுமார்- ஆகியோர் இயக்குநர் சொன்னதை ( மட்டும்) செய்து திரைக்கதையின் நகர்விற்கு பயன்பட்டு இருக்கிறார்கள்.
பாடல்கள் அனைத்தும் துள்ளலாக அமைந்திருப்பது காதல் கதைகளுக்கு பலம்.
உச்சகட்ட காட்சியில் காதலர்கள் காதலின் ஆழத்தை உணர்ந்து கொள்வது போன்ற காட்சி அமைப்பு... இயக்குநரின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது.
லவ் ஓ லவ் - கிக் ஓ கிக்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM