இதயம் முரளி - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : டான் பிக்சர்ஸ்
நடிகர்கள் : அதர்வா, பகத் ஃபாஸில், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ், மாளவிகா மோகனன், எஸ்.தமன், ஏஞ்சலீனா, காளி வெங்கட் மற்றும் பலர்.
இயக்கம் : ஆகாஷ் பாஸ்கரன்
மதிப்பீடு : 2.5/5
அதர்வா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் திரையில் தோன்றுவதாலும்.... ஒருதலை காதலை பற்றிய டிஜிட்டல் யுக பார்வை என்பதாலும்.. இதயம் முரளி திரைப்படத்தை காண ஒரு தலை காதல் உணர்வுடன் சென்ற ரசிகர்களுக்கு படக்குழு ஏமாற்றத்தை அளித்ததா? அல்லது உணர்வு பூர்வமான ஒரு தலை காதலின் உணர்வை வழங்கியதா ? என்பதை தொடர்ந்து காண்போம்.
பெற்றோர்கள் இல்லாமல் தனது உறவினரான மாமா தங்கா ( நட்டி நட்ராஜ்) வின் அரவணைப்பில் வளர்கிறான் இதயா( அதர்வா) . பாடசாலையில் பயிலும் போது கீதா ( ஜொனிட்டா காந்தி) எனும் ஆசிரியை மீது பிரியம் கொள்கிறான். அதனைத் தொடர்ந்து சமந்தா- சம்யுக்தா ( ப்ரீத்தி முகுந்தன்) என்ற இளம் இரட்டையர்களை காதலிக்கிறார். இவர்களில் யாரை காதலிக்கிறோம் என்பதில் குழப்பம் ஏற்படுவதால்... அந்த காதலை சொல்லாமல் தவிர்த்து விடுகிறார் இதயா. அதற்குப் பிறகு அமுதா ( கயாடு லோகர்) என்ற வைத்தியரை காதலிக்கிறார். இவரிடமும் காதலை சொல்ல தயங்குகிறார். இதற்குப் பிறகு தனது உறவினரான தங்கா ஏற்பாட்டின் படி அதிதி( மாளவிகா மோகனன்) எனும் பெண்ணை மணக்க இதயா ஒப்புக்கொள்கிறார். இதற்கான திருமண நிச்சயமும் நடைபெறுகிறது. திருமணத்திற்காக காத்திருக்கும் தருணத்தில் இதயாவை அமுதா ஒரு வணிக வளாகத்தில் சந்தித்து, ' கல்லூரியில் நாம் ஒன்றாக பயிலும் போது நான் உன்னை காதலித்தேன். இதனை உன்னை சந்தித்து சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் என்னால் சொல்ல முடியவில்லை. இப்போது சொல்லிவிட்டேன். மனதில் இருந்து பாரம் இறங்கியது போல் இருக்கிறது. இனி நான் சுதந்திரமாக இருப்பேன்' என்று சொல்கிறார். இதை கேட்டதும் தான் காதலித்த சமந்தாவிடம், 'நானும் உன்னை காதலித்தேன்' என்று சொல்லிவிட இதயா தீர்மானிக்கிறார். இதற்காக அவர் பணிபுரியும் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு அவரை சந்தித்து நான் உன்னை காதலித்தேன் என்ற விவரத்தை சொன்னாரா? இல்லையா? என்பதும், இவருக்கும், அதிதிக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
நடிகர் முரளி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'இதயம்'. சேரன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'ஆட்டோகிராப்'. இதை இரண்டையும் இணைத்து.. சொல்ல முடியாத காதல் ஒன்று அல்ல பல இருந்தால்... எப்படி இருக்கும் ? அதை கொமடி கலந்து இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் சொன்னால் எப்படி இருக்கும்? என்று யோசித்ததன் விளைவு தான் இந்த திரைப்படம் என தெரிகிறது. அந்த ஒரு தலை காதலில் ஒரு காதலி இரட்டையராக இருந்தால்... எப்படி இருக்கும்..? என்று யோசித்து திரைக்கதை எழுதி இருப்பதில் புத்திசாலித்தனம் இருந்தாலும்... அதனை திரை மொழியில் அழுத்தமான காட்சி அமைப்புகளால் சொல்ல தவறியிருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். அதற்கு பதிலாக வண்ணமயமான ஒளிப்பதிவு- திருச்சி, சென்னை, அமெரிக்கா என அற்புதமான லொகேஷன்ஸ் - அதிரடியான இசை- காட்சிக்கு காட்சிக்கு முன்னணி நட்சத்திர பட்டாளங்கள்- என மாயஜாலம் காட்டியிருக்கிறார் காஸ்ட்லியான தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன்.
நடிகர் முரளிக்கு மென் சோகம் கொண்ட கண்கள் இருந்ததால்.. ஒரு தலை காதல் கதையில் அவருடைய முகம்- தோற்றம்- உடல் மொழி- வசன உச்சரிப்பு - ஆகியவை பொருத்தமாக இருந்தது. ஆனால் இயல்பிலேயே துறுதுறுவென காந்தம் போன்ற கம்பீரமான கண்களைக் கொண்ட அதர்வா- ஒரு தலை காதலுக்கு பொருத்தமானவராக தன்னை மாற்றி அமைத்து கொண்டிருப்பது தான் பார்வையாளர்களுக்கு ஏக ஆச்சரியம். அதர்வாவின் நடிப்பு வெல்டன். ஒவ்வொரு பருவத்திலும் தன்னுடைய தோற்றத்திலும் உடல் மொழியிலும் முதிர்ச்சியை திரையில் காண்பித்து ரசிகர்களிடம் சபாஷ் பெறுகிறார் அதர்வா.
சமந்தா- சம்யுக்தா கதாபாத்திரத்தில் தோன்றும் ப்ரீத்தி முகுந்தனை விட திரை பங்களிப்பில் குறைவான நேரமே இடம் பிடித்திருக்கும் அமுதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கயாடுவின் நடிப்பு- ரசிகர்களை வசீகரிக்கிறது.
ஒரு தலை காதல் உணர்வை முதல் பாதியின் இறுதிக்காட்சிகளில் பார்வையாளர்களுக்கு நேர்த்தியாக கடத்தும் படக்குழு ... அத்துடன் அந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு... வேறு திசையில் பயணிப்பது பார்வையாளர்களுக்கு சோர்வை தருகிறது.
இதயா காதலை வெளிப்படுத்துவதில் தயங்குவதற்கான காரணத்தை விவரிக்காமல்... அந்த கதாபாத்திரம் அப்படித்தான் என வடிவமைத்திருப்பது புதிர்.
மூச்சு விடாமல் பாடும் தமனின் முயற்சியை பாராட்டினாலும்.. அதற்கான திரை மொழி... எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் முதன் முறையாக சுப்பர் ஸ்டாரின் பாதிப்பு இல்லாமல் இயல்பாக நடித்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பகத் பாஸில்.. பார்வையாளர்களின் பங்களிப்பாக திரையில் தோன்றுவது நிறைவைத் தருகிறது.
'பரிதாபங்கள்' சுதாகர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். உச்சகட்ட காட்சிகளும் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
இதுபோன்ற காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் உளவியல் ரீதியான உரையாடல்கள் கவனம் பெறும். ஆனால் இதில் அவை மிஸ்ஸிங்.
குறைவான கதாபாத்திரங்களில் சொல்லப்பட்டிருந்தால்... இந்த ஒரு தலை காதல் இதயத்தை தொட்டிருக்கும்.
இதயம் முரளி - 'ஜிகினா' காதல்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM