ஐ நோபடி - I, Nobody - திரைப்பட விமர்சனம்

11 Jul, 2026 | 05:12 PM
image

தயாரிப்பு : பிருத்விராஜ் புரொடக்‌ஷன்ஸ் & E 4 எக்ஸ்பெரிமெண்ட்ஸ்

நடிகர்கள்: பிருத்விராஜ், பார்வதி திருவோத்து, ஹக்கீம் ஷாஜகான் , அசோகன், விஜயராகவன், மது பால் , சங்கர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.

இயக்கம் : நிசாம் பஷீர்

மதிப்பீடு : 3 / 5

மலையாள மொழியிலிருந்து திரில்லர் திரைப்படங்கள் வெளியானால் அதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜ்- பார்வதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'ஐ நோபடி ' எனும் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படக் குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

அரசாங்க ஊழியராக பணியாற்றும் ராஜீவன்( பிருத்விராஜ் )-  தன் மனைவி மீரா( பார்வதி திருவோத்து) , பணியாற்றும் தனியார் வங்கியில் உயரதிகாரியுடன் சட்டத்திற்கு விரோதமான விரைவில் ஈடுபட்டிருப்பதாக அவதானிக்கிறார். இதனால் கடும் ஆத்திரம் கொள்ளும் ராஜீவன் - மனைவியின் ஆசை நாயகனை கொலை செய்யும் எண்ணத்துடன் அந்த தனியார் வங்கிக்கு பணி நேரத்தில் செல்கிறார். அங்கு அந்தத் தருணத்தில் சில கொள்ளையர்கள் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து தப்பிக்கும் தருணத்தில்.. அங்கு சாதாரண மக்களோடு மக்களாக இருக்கும் ராஜீவனிடத்தில் துப்பாக்கி இருப்பதை பார்த்து ... இவர் காவல்துறையினரை சார்ந்தவராக இருப்பாரோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரையும் கண்ணை கட்டிக்கொண்டு கடத்திச் செல்கிறார்கள். வங்கி கொள்ளை சம்பவம் என்பதால் காவல்துறையினர் இது தொடர்பான வழக்கை பதிவு செய்து விசாரிக்க தொடங்குகிறார்கள். அவர்களது விசாரணையில் கண்காணிப்பு கமெராவில் பதிவான ராஜீவன் மீது சந்தேகம் எழுகிறது. ராஜீவனை புலனாய்வு காவல் துறையினர் கண்காணிக்கத் தொடங்குகிறார்கள். இந்தத் தருணத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்கள் விபத்தில் இறந்து விடுகிறார்கள். அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் காணாமல் போகிறது. தற்போது காவல்துறை கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே? என தேட தொடங்குகிறது. மக்களும் வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ராஜீவனிடம் தான் இருக்கிறது என நம்புகிறது.‌ இதற்காக அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் முதல் அவரிடம் இருக்கும் பணத்தை பறிக்க பலரும் பல வகைகளில் முயற்சிக்கிறார்கள். காவல்துறையில் லஞ்சம் வாங்கியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் அனஸ் ( ஹக்கீம் ஷாஜகான்) இந்த விடயத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டுகிறார். அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ராஜீவனின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டு, அதனை அவரிடமிருந்து மீட்க தனியாக முயற்சிக்கிறார். ராஜீவன், அவரது மனைவி மற்றும் மகள்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகிறது. வங்கி கொள்ளை சம்பவத்தில் நேரடியாக தொடர்பு எதுவும் இல்லாத ராஜீவன்... மக்களின் பணத்தாசை காரணமாக நாளாந்த இயல்பு வாழ்க்கையை தொலைக்கிறார். இந்த விடயத்தில் மீண்டும் பழைய நிலை திரும்பி, இயல்பான வாழ்க்கையை வாழ விரும்பும் ராஜீவன் அதிரடியான முடிவுகளை மேற்கொள்கிறார். அவை என்ன? அவற்றால் ராஜீவன்- மீரா தம்பதிகள் தங்களுடைய பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர்ந்தார்களா? இல்லையா? என்பதை பரபரப்பாகவும்... விறுவிறுப்பாகவும்.. விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

வங்கி கொள்ளைச் சம்பவம்... ஆனால் அதில் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு சாதாரண மனிதன்... இந்த இரண்டு அம்சங்களை முதன்மையாகக் கொண்டு பரபரப்பாக எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை... ரசிகர்களுக்கு பல அற்புதமான படமாளிகை அனுபவங்களை வழங்குகிறது. அதிலும் இரண்டாம் பாதியில் எக்சன் காட்சிகள் அதிகம் இருந்தாலும்... அவை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

உச்சகட்ட காட்சியில் வங்கி கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ராஜீவன் குடும்பத்திற்கு அரசாங்கமும், அம்மாநில முதல்வரும் பங்கு பற்றி தீர்வை தருவது ரசிகர்களுக்கு காரம் மணம் குணமிக்க கொமர்சல் மசாலா.

ராஜீவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ் - உரையாடல்களை நிகழ்த்தாமல்.. மௌனமாக திரையில் தோன்றி, ரசிகர்களை தன் வசப்படுத்தி இருப்பதை பாராட்டலாம்.

மீரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்வதி.. அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார்.

அனஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கீம் ஷாஜகான் நடிப்பிலும் தனித்துவம் தெரிகிறது.

தினேஷ் புருஷோத்தமனின் ஒலிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை யும் ரசிகர்களை தடதடக்க பயணிக்க வைக்கிறது.

கடந்த கால கேரளா மாநில அரசியல் குறித்த குறியீடுகளும், உரையாடல்களும் ரசிகர்களுக்கு எதிர்ப்பாராத ஜாக்பாட்.

பரபரப்பு ...விறுவிறுப்பு... முதல் காட்சியில் இருந்தே தொடங்கினாலும்... சுவாரசியமான திருப்பங்கள் இருந்தாலும்... மின் தூக்கி, அடுக்குமாடி குடியிருப்பு என குறைவான அளவு கொண்ட பகுதிகளில் நேர்த்தியாக சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்... நீளம் அதிகம்.

ஐ நோபடி I, Nobody) - எவரிபடி நோ ( Everybody Know)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47