மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை- லிம்ப் சால்வேஜ் சர்ஜேரி

11 Jul, 2026 | 05:00 PM
image

எம்மில் பலருக்கு எலும்பு பகுதிகளில் ஏற்படும் ஓஸ்டியோசர்கோமா எனப்படும் புற்றுநோய் பாதிப்பின் போது மூட்டு எலும்புகள் முழுவதுமாக அகற்றப்படாமல் இருப்பதற்காக லிம்ப் சால்வேஜ் சர்ஜேரி எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடுமையான காயங்கள், தொற்று பாதிப்பு, புற்றுநோய், கடுமையான கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரையின் அளவு காரணமாக கால்களில் ஏற்படும் பாதிப்பு, எலும்பு முறிவு.. போன்ற தருணங்களில் மூட்டுகளை முழுவதுமாக அகற்றாமல் உறுப்புகளை பாதுகாப்பதற்காக நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய லிம்ப் சால்வேஜ் சர்ஜேரி எனும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கை, கால் ஆகிய உறுப்புகளில் ஓஸ்டியோசர்கோமா போன்ற பாதிப்பு ஏற்பட்டால்.. நோயாளியின் கை மற்றும் கால் உறுப்புகளை பாதுகாப்பதற்காக இத்தகைய சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் எலும்பு அல்லது மென்மையான திசுக்களில் உள்ள கட்டிகளை அகற்றுவதற்காகவும் இத்தகைய சத்திர சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கை கால் உள்ளிட்ட எலும்பு பகுதிகளில் கட்டி பாதிப்பு வராமல் பாதுகாக்கப்படுகிறது.

மென் திசு பகுதிகளில் ஏற்படும் புற்று நோயை அகற்றுவதற்காகவும் இத்தகைய சத்திர சிகிச்சைகள் பலன் அளிக்கிறது. இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொண்ட பிறகு ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களில் நல்லதொரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைகள் மூலம் உறுப்புகள் துண்டிக்கப்படாத நிலையில் தற்காத்துக் கொள்ளலாம்.

வைத்தியர் விஷ்ணுதரன் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெனிட்டோயூரினரி டியூபர்குளோசிஸ் எனும் சிறுநீரகத்தில் ஏற்படும்...

2026-08-18 16:54:32
news-image

கேஸ் கீஸர் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய...

2026-08-17 15:34:34
news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41