நடிகர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்

11 Jul, 2026 | 04:56 PM
image

தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தைப் பற்றிய புதிய தகவலை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறது.

இயக்குநர் ஹெச் .வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பொபி தியோல், மமீதா பைஜூ , கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பொலிடிக்கல் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்திருக்கிறார்.

பல தடைகளைக் கடந்து இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும், இப்படத்திற்கு இந்திய தேசிய திரைப்பட சான்றிதழ் வாரியம் பட மாளிகையில் வெளியிடுவதற்கான சான்றிதழை வழங்கியுள்ளதாகவும், விரைவில் படத்தின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

இதனிடையே திரையுலக வணிகர்களிடம் நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த திரைப்படம் தமிழில் எதிர்வரும் 24 ஆம் திகதியன்று 800க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும், இணையத்தில் கசிந்த இந்த திரைப்படத்தை இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் மக்களின் டிஜிட்டல் பார்வைகளை பெற்றிருக்கிறது என இத்துறை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் இருப்பினும் இந்தத் திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்பதால், வெளியான முதல் நாளில் இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாயை வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47