நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைகளில் கைதிகள் உயிரிழந்த சம்பவமும், ஏனைய சிறைச்சாலைகளில் கைதிகள் மீது காவலர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பழிவாங்கல் தாக்குதல் சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடகப் பேச்சாளர் ரவினா ஷம்தசானி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், இம்மோதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பல குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று தெரியவர வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் உறுதியளித்துள்ளதை நாம் வரவேற்கிறோம். அவ்விசாரணைகள் உடனடியாகவும், சுயாதீனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும். இந்த வன்முறையானது, இலங்கையின் தடுப்புக்காவல் மையங்கள் தொடர்பான கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருத்தல், சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவான நெரிசல் மற்றும் அங்குள்ள போதிய வசதியின்மை போன்ற குறைபாடுகளும் இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவே பெருமளவான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோருக்குச் சிறைத்தண்டனை வழங்குவதை விடுத்து, ஆரோக்கியம் சார்ந்த புனர்வாழ்வு அணுகுமுறைகளையே வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"பாதிக்கப்பட்ட கைதிகள் மாற்றப்பட்ட ஏனைய சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் மையங்கள் உள்ளிட்ட நீர்கொழும்பு சிறைச்சாலைக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் எவ்வித தடங்களுமின்றிச் சென்று பார்வையிடுவதற்கான அனுமதியை அதிகாரிகள் வழங்க வேண்டும். ஏனெனில், மாற்றப்பட்ட கைதிகள் அங்கு சித்திரவதைகளுக்கும் ஏனைய மோசமான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன" என்றும் ஐநா ஊடகப் பேச்சாளர் ரவினா ஷம்தசானி மேலும் வலியுறுத்தியுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM