பதுளையில் தனியார் ஆய்வகங்களில் காலாவதியான மருத்துவ உபகரணங்கள், இரசாயனங்கள் மீட்பு!

11 Jul, 2026 | 01:19 PM
image

பதுளை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இரசாயன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் தியத்தலாவை, பண்டாரவளை மற்றும் பதுளை ஆகிய நகரங்களில் இரண்டு நாட்களாக இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆய்வுகளின் போது, காலாவதி திகதியைத் தாண்டிய பின்னரும் பல நிலையங்களில் வைத்திருக்கப்பட்டிருந்த பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் இரசாயனங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மருத்துவத் துறையில் இவ்வாறான காலாவதியான இரசாயனப் பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவது கடுமையான சட்ட மீறலாகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவ ஆய்வகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31