நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக உயர்வு: 9 நாட்களில் 10,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு!

11 Jul, 2026 | 12:36 PM
image

இலங்கையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,174 ஆக உயர்வடைந்துள்ளது.

ஜூலை மாதத்தின் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 10,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், நேற்று வெள்ளிக்கிழமை  (10) ஒரே நாளில் மாத்திரம் சுமார் 1,110 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் இந்த மோசமான சூழ்நிலை காரணமாக, நாட்டின் பல பிரதான வைத்தியசாலைகள் தங்களது அதிகப்படியான கொள்ளளவை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் வைத்தியசாலைகளில் கடுமையான நெருக்கடியும் நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31