இலங்கை–இந்தியா ஊடக நட்புறவு சங்கம் (SLIMFA) ஏற்பாடு செய்துள்ள 'தி மீடியா பெஸ்ட் 2026' (The Media Fest 2026) நிகழ்வின் இரண்டாவது பதிப்பு இன்று கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலின் கிராண்ட் மார்கீ மண்டபத்தில் ஆரம்பமானது.
"மாறிவரும் உலகுடனான ஒத்திசைவு " (Staying Relevant in a Changing World) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஊடகத்துறை நிபுணர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவு ,சமூக ,பொருளாதார மற்றும் கலாசார ஒருங்கிணைப்பை இரு நாடுகளின் ஊடகத்துறை மேலும் வலுப்படுத்துகிறதென தெரிவித்தார்.
மாநாட்டின் தொடக்க அமர்வில்
சிறப்பு உரையாற்றிய ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை ஆசிரியரும் துணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்மிதா பிரகாஷ் (chief editor and deputy ceo of Asian news international Ms. Smita Prakash)
நவீன ஊடக உலகில் வேகமாக நிகழும் மாற்றங்கள், டிஜிட்டல் ஊடக சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் செய்தியறிக்கையின் எதிர்காலம் தொடர்பாக விரிவாக கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊடக நிறுவனங்கள் தங்களை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும், தகவல் பரிமாற்றத்தின் புதிய போக்குகள் மற்றும் தரமான செய்தியளிப்பை உறுதிப்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு ஆகிய விடயங்களும் மாநாட்டில் ஆராயப்பட்டன.
நிகழ்வில் எல்லை தாண்டிய ஊடக ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல், அனுபவப் பகிர்வு, புதிய ஊடகப் போக்குகள் குறித்து கலந்துரையாடல் மற்றும் எதிர்கால ஊடக வளர்ச்சிக்கான கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM