கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றுடன் பறவையொன்று மோதியுள்ளது.
துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான 'TK-731' என்ற 'A330' ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டுள்ளது.
பறவை மோதியதால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையைத் தொடர்ந்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விமானத்தின் எடையைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் நோக்கில், முதலில் சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவ்விமானம், தற்போது நீர்கொழும்பு கலப்பு கடல் வான்பரப்பில் வட்டமிட்டவாறு தனது எரிபொருளைப் பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM