கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு தோணியில் 150 லீற்றர் கசிப்பு கடத்திய ஒருவர் கைது

Published By: Vishnu

10 Jul, 2026 | 10:03 PM
image

கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில்  வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேனுஜன் தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பரகளான யசோதரன், ஹேமச்சந்திர மற்றும்  விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (10) அதிகாலை 4 மணிக்கு  குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்

இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் 60 வயதுடைய ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரை  கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50