ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும் உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டி

Published By: Vishnu

10 Jul, 2026 | 09:27 PM
image

(நெவில் அன்தனி)

முன்னாள் உலக சம்பியன் ஸ்பெய்னுக்கும் பெல்ஜயத்துக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டி லொஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி சனிக்கிழமை (11) நள்ளிரவுக்கு பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருட உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் மூன்றாவது தடவையாக ஐரோப்பிய நாடொன்றை  ஸ்பெய்ன் சந்திக்கவுள்ளது.

அதேவேளை, இந்த சுற்றுப் போட்டியில் இதுவரை ஆபிரிக்க, ஆசிய, அமெரிக்க அணிகளை எதிர்கொண்டு கால் இறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம் முதல் தடவையாக ஐரோப்பிய அணி ஒன்றை எதிர்த்தாடவுள்ளது.

எச் குழுவில் காபோ வேர்டே உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி (0 - 0) முடித்துக்கொண்ட ஸ்பெய்ன், அடுத்த இரண்டு போட்டிகளில் சவூதி அரேபியாவை 4 - 0 என்ற கோல்கள் கணக்கிலும் உருகுவேயை 1 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிகொண்டு   32 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. 

32 அணிகள் சுற்றில் ஆஸ்திரியாவை 3 - 0 என இலகுவாக வெற்றிகொண்ட ஸ்பெய்ன், 16 அணிகள் சுற்றில் மற்றுறொரு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லை 1 - 0 என வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறியது.

இந்த ஐந்து போட்டிகளிலும் ஒரு கோலைத்தானும் விட்டுக்கொடுக்காக ஸ்பெய்ன், கால் இறுதியிலும் எதிரணிக்கு கோல் எதையும் விட்டுக்கொடுக்காமல் வெற்றி பெற முயற்சிக்கவுள்ளது.

ஜீ குழுவில் எகிப்துடனான தனது முதலாவது போட்டியையும் (1 - 1), ஈரானுடனான இரண்டாவது போட்டியையும் (0 - 0)  வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட பெல்ஜியம், 32 அணிகள் சுற்றில் செனகல்லை 3 - 2 எனவும் 16 அணிகள் சுற்றில் வரவேற்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்காவை 4 - 1 எனவும் வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறியது.

ஸ்பெய்ன், பெல்ஜியம் ஆகிய இரண்டு அணிகளும் இதுவரை சந்தித்துக்கொண்ட 39 சந்தர்ப்பங்களில் ஸ்பெய்ன் 22 வெற்றிகளையும் பெல்ஜியம் 5 வெற்றிகளையும் ஈட்டியுள்ளன. ஐந்து போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இந்த இரண்டு அணிகளும் முதல் தடவையாக மெக்ஸிகோ 1986 உலகக் கிண்ணத்தில் சந்தித்துக்கொண்ட கால் இறுதியில் பெல்ஜியம் 5 - 4 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்றது.

நான்கு வருடங்கள் கழித்து இத்தாலியில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இந்த இரண்டு அணிகளும் ஒரே குழுவில் மோதிக்கொண்டபோது ஸ்பெய்ன் 2 - 1 என வெற்றிபெற்றிருந்தது.

பெல்ஜியம் இப்போது 3ஆவது தடவையாக கால் இறுதியில் விளையாடவுள்ளது.

ஸ்பெய்னைப் பொறுத்த மட்டில் கால் இறுதிச் சுற்று மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கவில்லை.

ஆறு தடவைகள் கால் இறுதிகளில் விளையாடியுள்ள ஸ்பெய்ன், 1950இலும் 2010இலும் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

ஸ்பெய்னின் ஒட்டுமொத்த பெறுபேறுகளுடன் பெல்ஜியத்தின் பெறுபெறுகளை ஒப்பிடுகையில் ஸ்பெய்னின் பெறுபெறுகள் சிறப்பாக இருப்பதுடன் அதன் வெற்றி வாய்ப்பு அதிகமாகத் தென்படுகிறது.

ஆனால், ஸ்பெய்னுக்கு பெல்ஜியம் பலத்த சவாலாக இருக்கும் என்பது நிச்சயம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46