சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

Published By: Vishnu

10 Jul, 2026 | 08:04 PM
image

இராஜதந்திர சேவைக்காலத்தை பூர்த்தி செய்து புறப்படவிருக்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon LEE), வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தார்.

இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக வழங்கிய பங்களிப்பை தாம் பாராட்டுவதாக கொரியத் தூதுவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கும் இலங்கையின் அபிவிருத்திக்காகவும் கொரிய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பு குறித்து ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான கொரியக் குடியரசு தூதரகத்தின் பிரதி தூதுக்குழுத் தலைவர் Eunji Kang ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34
news-image

மட்டக்களப்பில் 216 கி.மீ. மின்வேலி அமைப்பு:...

2026-08-19 17:24:19
news-image

சிறைச்சாலைகளில் புதிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு...

2026-08-19 17:15:20