67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் திட்டம் இன்று ஆரம்பம்

Published By: Vishnu

10 Jul, 2026 | 07:26 PM
image

67,000 குடும்பங்களின் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும், இலங்கையின் இரண்டாவது பாரிய நீர் திட்டம் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்படுகிறதுஎன்று  அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநுராதபுரத்தில் எங்களுக்கு நீர் என்பது உயிர். இது குளங்கள் நிறைந்த இராஜ்யம். ஆயினும், குடிப்பதற்கு சிறிதளவு நீரைக் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது நாம் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம். இப்பிரதேசத்தில் வீதியின் இருமருங்கிலும் அதிகமாக இருப்பது நீர் விற்பனை செய்யும் கடைகளாகும். அவ்வாறு நடப்பதற்குக் காரணம், குடிப்பதற்கிருக்கும் நீர் ஊற்றுகளின் மீது நம்பிக்கை இல்லாததேயாகும். குழாய் மூலமான நீரைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னும் பெருமளவிலான மக்கள் காத்திருக்கிறார்கள்.

இப்போது நிர்மாணிக்கப்பட்டு வருவது பன்னிரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிய சுத்திகரிப்பு நிலையத்துடனான ஒரு திட்டமாகும். இதன் விநியோகக் குழாய்கள் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவடைகின்றன. 67,000 நீர் இணைப்புகளை வழங்கும், 51 பில்லியன் செலவில் அமைக்கப்படும் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டம் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இப்பிரதேச மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக மக்கள்நேய அரசாங்கம் என்ற வகையில் இது போன்ற பல பாரிய திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதுமட்டுமன்றி, அநுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம, கிரிபாவ திட்டம், எப்பாவல, கல்நேவ, பயாகல போன்ற  பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நாட்டு மக்கள் ஒரு மக்கள்நேய அரசாங்கத்தை உருவாக்கி எதிர்பார்த்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50