வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி அபிவிருத்தி : சுற்றுலாத்துறையை வளர்க்க கஜேந்திரகுமார் யோசனை!

10 Jul, 2026 | 06:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும்  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது  ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியினால் கொண்டுவரப்பட்ட யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறை சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

யாழ். மாவட்டத்தை  சுற்றுலா பிரதேசத்தின் முக்கியமான மைய பிரதேசமாக மாற்றுவதாக இருந்தால் அதற்கான போக்குவரத்து ஸ்தானங்களை உறுதிப்படுத்த வேண்டும். இதில் முதலாவது பலாலி விமான நிலையம் முக்கியமானது. இந்தியா இதனை அபிவிருத்தி செய்ய தயாராக இருந்தாலும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அந்த உதவியை பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர்.

மூன்று கட்டமாக அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இணங்கியிருந்தது. அதில் ஓடுபாதை அபிவிருத்தியை செய்ய வேண்டும். பிராந்திய விமானங்கள் வந்து இறங்கக்கூடியவாறு இருக்க வேண்டும். அப்படியென்றால் சிங்கப்பூர், டுபாய் போன்ற இடங்களில் இருந்து விமானங்களை இறக்கக்கூடியதாக இருக்கும்.

இந்தியா இலவசமாக அதற்கான உதவியை வழங்க முன்வந்த போதும் அதனை அனுபவிக்காமல் இருப்பது துரதிஸ்டவசமானது. இதன்படி அதனை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் அவர்கள் வர தயாராக இருக்கின்றனர். இதற்காக முதலாவதாக அங்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும்.

இராணுவ எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறு கனிசமான மாற்றம் ஏற்பட்டால் எமது மண்ணை சார்ந்த மக்களே யாழ்ப்பாணத்திற்கு வந்து முதலீடுகளை செய்து பொருளாதார இருப்புகளை முன்னேற்றலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50