சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5 கோடி நஷ்டம் : சிவில் புலனாய்வு முன்னணியால் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு!

10 Jul, 2026 | 06:00 PM
image

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டர் நடைமுறையில் பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக சிவில் புலனாய்வு முன்னணி (Civil Intelligence Front) குற்றஞ்சாட்டியுள்ளது. 

குறித்த டெண்டர் கோரலின்போது மிகக் குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த தகுதியான நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்காது, விதிகளுக்குப் புறம்பான முறையில் அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்துக்கு அது வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 8 அன்று கோரப்பட்ட இந்த டெண்டரில் மூன்று நிறுவனங்கள் விலைமனுக்களை சமர்ப்பித்திருந்தன. அதில் ஒரு கிலோகிராம் கழிவை அகற்றுவதற்கு முறையே 179 ரூபாய், 230 ரூபாய் மற்றும் 260 ரூபாய் என விலைகள் கோரப்பட்டிருந்தன. விதிகளின்படி, ஆகக் குறைந்த விலையான 179 ரூபாயைக் கோரிய நிறுவனத்துக்கே இந்த டெண்டர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில நாட்களிலேயே அந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டு, ஒரு கிலோகிராமுக்கு 230 ரூபாய் கோரியிருந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக விலைக்கு இந்த டெண்டரைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என சிவில் புலனாய்வு முன்னணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. 

'சமல் ராஜபக்ஷ வேஸ்ட் பெசிலிட்டி மெனேஜ்மென்ட்' (Chamal Rajapaksa Waste Facility Management) என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம், தற்போது அதன் பெயரை 'ஜி.எஃப்.சி' (GFC) என மாற்றியுள்ளதாக போதிய ஆதாரங்களுடன் சிவில் புலனாய்வு முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த விலை சமர்ப்பிப்பை நிராகரித்து, அதிக விலை கொண்ட இந்த நிறுவனத்தைத் தெரிவு செய்தமையினால், ஒரு கிலோகிராமுக்கு 51 ரூபாய் வீதம், மொத்தம் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராமுக்கு கணக்கிடும்போது அரசாங்கத்திற்கு 3 கோடியே 31 இலட்சத்துக்கும் அதிக நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலைகளின் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது என்பது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான விடயமாக இருக்கும் நிலையில், டெண்டர் தொழில்நுட்பக் குழுவில் உள்ள சில அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட லாபங்களுக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தகுதியான நிறுவனங்களை ஓரங்கட்டியுள்ளனர். 

இந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து சிவில் புலனாய்வு முன்னணியினர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமான ஆவணங்களுடன் உத்தியோகபூர்வ முறைப்பாட்டை அளித்துள்ளனர்.

அமைச்சர் மட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இது அப்பட்டமான பொதுப்பண ஊழல் என்பதால், இதுகுறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

மேலும், சுகாதார அமைச்சின் செயலாளர் உடனடியாகத் தலையிட்டு இந்த டெண்டரை ரத்து செய்து, அரசுக்கு ஏற்படவிருக்கும் இந்த கோடிக்கணக்கான நஷ்டத்தைத் தடுக்க வேண்டும் எனவும், இது குறித்து ஜனாதிபதிக்கும் விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவில் புலனாய்வு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50