களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் விசேட வேலைத்திட்டம்

10 Jul, 2026 | 04:52 PM
image

(நமது நிருபர்)

கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாழும் சுமார் 8 மில்லியன் மக்களின் பிரதான குடிநீர் மூல ஆதாரமாக விளங்கும் களனி கங்கையைப் பாதுகாப்பதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது தற்போது நுவரெலியா முதல் அம்பத்தலே வரை களனி கங்கையின் 27 இடங்களில் இருந்து நீரைப் பெற்று, சுமார் இரண்டு மில்லியன் குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், இந்த நதியானது பெருமளவிலான தொழிற்சாலைகளுக்கும் பிரதான நீர் ஆதாரமாக விளங்குகின்றது.

எவ்வாறாயினும், களனி கங்கைப் படுக்கையில் இயங்கி வரும் சுமார் 6,000 தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மனித செயற்பாடுகள் காரணமாக, ஆற்றின் நீரின் தரத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக உடனடி மற்றும் ஒருங்கிணைந்த தலையீடுகளை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடிநீரின் தரம் மற்றும் நதிச் சூழலமைப்பு என்பன கடுமையான நெருக்கடிக்குள்ளாகலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவின் தலைமையில் செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம், பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து நீர் மாசுபாட்டைக் குறைப்பதும் நதியைப் பாதுகாப்பதுமாகும்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கைத்தொழில் அமைச்சு மற்றும் களனி கங்கைப் படுக்கையில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், இதன்போது ஆற்றின் நீரின் தரத்தைப் பாதுகாத்தல், கைத்தொழில் மற்றும் நகர்ப்புறக் கழிவு நிர்வாகத்தை மேம்படுத்தல், சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் நீண்டகாலக் கண்காணிப்பு பொறிமுறையொன்றை நிறுவுதல் ஆகிய விடயங்கள் குறித்து அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50