ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள் சாதனை

Published By: Digital Desk 3

10 Jul, 2026 | 04:39 PM
image

(செ.சுபதர்ஷனி)

இலங்கை மருத்துவத்துறையின் மற்றுமொரு மைல்கல்லாக, இடுப்புப் பகுதி இணைந்தவாறு ஒட்டிப்பிறந்த இரட்டைச் சிறுமிகளை நீண்ட  சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் பேராதனை வைத்திய நிபுணர்கள் வெற்றிகரமாகப் பிரித்துச் சாதனை படைத்துள்ளனர்.

பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடம் ஆகியன ஒன்றிணைந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளன.

மாவனெல்லை, அரநாயக்கவைச் சேர்ந்த  தம்பதியினருக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு இடுப்புப் பகுதி ஒட்டியவாறு லினுலி தருல்யா, லிதுலி மனுல்யா ஆகிய இரட்டைச் சிறுமிகள் பிறந்தனர். இவர்களுக்கு மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியன தனித்தனியாக ஆரோக்கியமாக இருந்தபோதிலும், இரண்டு சிறுநீரகங்கள் மாத்திரமே ஒரு குழந்தையின் உடலில் அமைந்திருந்தன. அத்துடன் இடுப்பு வளைய எலும்புகள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் 90 பாகை கோணத்தில் குறுக்கு திசையில் மிகவும் சிக்கலாகப் பிணைந்திருந்தன.

உலகளவில் இவ்வாறான 1000 சம்பவங்களில் 20 பிள்ளைகளே பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இது இரண்டாவது தடவையாகும். சுமார் 5 வருட கால தொடர் ஆய்வுகளின் பின்னர், கடந்த ஜூன் 10 ஆம் திகதி சிறுவர் அறுவைச் சிகிச்சை நிபுணர் மாதுல ஹெட்டி ஆராச்சியின் தலைமையில் 15 பேரடங்கிய நிபுணத்துவ மருத்துவக் குழுவினர் இப்பாரிய சத்திரசிகிச்சையை ஆரம்பித்தனர்.

முதலில் கடுமையான இரத்தப்போக்கு மற்றும் நரம்புப் பாதிப்புகள் ஏற்படாதவாறு இரத்த நாளங்களும் நரம்புகளும் பிரிக்கப்பட்டன. பின்னர் கால்களுக்கான இரத்த ஓட்டத்தைப் பேணியவாறு எலும்புகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டன. 14 மணித்தியால பிரதான அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, பிரிக்கப்பட்ட இடங்களை மூடுவதற்காக மேலும் 10 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை நீடித்தது. தற்போது இவ்விரு சிறுமிகளும் நல்ல ஆரோக்கியத்துடன், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுத் தேறிவருவதாக வைத்தியர் மாதுல ஹெட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50