'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்டம் ; போதைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம்!

10 Jul, 2026 | 04:30 PM
image

(எம்.மனோசித்ரா)

'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அப் பணியகத்தின் கீழ் புனர்வாழ்வுக்காக வழிகாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிக்கும் செயற்திட்ட  முன்னேற்றம் உள்ளிட்ட முக்கிய விபரங்களைத் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (10) கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் பிரதான காரியாலயம் மற்றும் ஊடக மையத்தில் நடைபெற்றது. இதன் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதில் புனர்வாழ்வுப் பணியகத்தின் தலைவர் பேராசிரியர் வசந்தா சுபசிங்க, பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற கே.கே.எஸ். கொத்தலாவல, உதவிப் பணிப்பாளர் நிலானி அளுத்கே, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பணிப்பாளர் மருத்துவர் எரங்கா ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் புனர்வாழ்வுப் பணியகத்தின் உதவியை எதிர்பார்ப்பவர்கள், 0769627761 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடியாக உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று, அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையினால் போதைப்பொருள் ஒழிப்பிற்காக 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 18,901 ஆலோசனைச் சேவைகள் நடத்தப்பட்டுள்ளன.

இக்காலப்பகுதிக்குள் அந்த நிறுவனத்தினால் சிகிச்சைக்காக வழிகாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,652 ஆகும். இது தொடர்பான சேவைகளை 1927 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் மூலமும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என இதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34
news-image

மட்டக்களப்பில் 216 கி.மீ. மின்வேலி அமைப்பு:...

2026-08-19 17:24:19