வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன கூறுகையில்,
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைத ஒருவரே இவ்வாறு வாசனை சவற்காரங்களுடன் கைதுசெய்யப்பட்டார்.
பொலிசாரின் சோதனையின் பொது வெளியிடமொன்றிலிருந்து பாசல் சேவிஸ் மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில் மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கைது செய்தப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.
கைதான நபரிடம் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ் பொலிஸ் பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் - என்றும் தெரிவித்தார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM