(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய வகையில் குடும்பங்களுக்கு ஊக்கவிப்புத் தொகையை வழங்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவினால் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இளைஞர் சனத்தொகை வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும் எனவும் இதனால் குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிக்கக்கூடியவாறு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் அந்த பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் பி பெரேராவினால் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது,
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்பதாலும் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்கவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM