(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள பறங்கியாமடு புகையிரத வீதியில் காணப்படும் சிக்கல்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் புகையிரத பிரச்சனைகளுக்கும் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலதிக கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நகரம் வரையிலான பல பகுதிகளில் புகையிரத பாதைகள் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி இயங்குகின்றன. பொதுமக்கள் அன்றாடம் உயிர் அச்சத்துடன் புகையிரத பாதைகளை கடக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட புகையிரத கடவைகள் பல இடங்களில் சுமார் 5 கிலோமீற்றர் தூர இடைவெளியில் மட்டுமே அமைந்துள்ளன.
இதனால் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு பகுதியை அடைய வேண்டிய மக்கள்,குறிப்பாக முச்சக்கர வண்டிகள் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள், 15 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.
கோறளைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள பறங்கியாமடு பகுதியில், நீண்டகாலமாக மக்கள் பயன்படுத்தி வந்த வீதி,அண்மையில் புகையிரத திணைக்களத்தினால் இரும்புக் கடவை அமைத்து மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரையோர கிராமங்களில் வாழும் மக்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அதேபோன்று, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பணியாற்றும் கடவைப் பராமரிப்புக்கு கடந்த காலங்களில் பொலிஸாரின் ஊடாக சிலர் இப்பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த போதிலும், மிகக் குறைந்த கொடுப்பனவு காரணமாக பலர் தற்போது சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புகையிரத பாதையை கடக்காமல் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுவதால், இது மிகவும் அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும் என வலியுறுத்தினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள பறங்கியாமடு புகையிரத வீதியில் காணப்படும் சிக்கல்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் புகையிரத பிரச்சனைகளுக்கும் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த பிரச்சினைகள் தொடர்பில் யோசனைகளை முன்வையுங்கள்.அதனைத் தொடர்ந்து புகையிரதத் திணைக்களம் ஊடாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM