ராவ் பகதூர் ( தெலுங்கு) - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஸ்ரீ சக்ராஸ் என்டர்டெயின்மென்ட் - ஏ பிளஸ் எஸ் மூவிஸ்- பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் ஃபண்ட் - மாஹாயானா மோசன் பிக்சர்ஸ்.
நடிகர்கள் : சத்ய தேவ், விகாஸ் முப்பாலா, தீபா தாமஸ், பாலா பராசர், ஆனந்த் , பிரனய் வஹா, மாஸ்டர் கிரண் மற்றும் பலர்.
இயக்கம் : வெங்கடேஷ் மகா
மதிப்பீடு : 2.5 /5
'ஜீப்ரா' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் சத்ய தேவ் கதையின் நாயகனாக நடித்து தெலுங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம்... 'C/O காதல்' என தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, திரை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த படைப்பை இயக்கிய இயக்குநர் வெங்கடேஷ் மகா இயக்கத்தில் உருவான படம்... என்ற காரணத்தினால் தெலுங்கில் வெளியாகி இருந்தாலும் இந்த படத்தை காண்பதற்காக பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு.. மொழி கடந்த மகிழ்ச்சியான திரை அனுபவம் கிடைத்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
1991 ஆம் ஆண்டின் பின்னணியில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. புவனம் ராமப்பா ராவ் பகதூர் ( சத்ய தேவ்) கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இன்னும் நான்கு மாதங்கள் தான் அவரது ஆயுள் நீடிக்கும் என வைத்தியர்கள் அவதானிக்கிறார்கள். ஆனால் வைத்திய துறை சார்ந்த அதிசயமாக... அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில்... அவர் குறிப்பிட்ட காலகட்டத்தை கடந்தும் உயிருடன் இருக்கிறார். அத்துடன் அவருடைய நாளாந்த நடவடிக்கைகளில் விசித்திரமான மாற்றங்கள் நடைபெறுகிறது. இது அவருடைய நெருங்கிய நண்பரும், வைத்திய நிபுணருமான நாராயணாச்சாரியை குழப்பமடைய செய்கிறது. ராமப்பா உயிரிழக்காமல்.. உயிரை கையில் பிடித்து வைத்திருக்கும் பின்னணியை - உளவியல் காரணியை .. அவரே கண்டறிய முயல்கிறார். அது என்ன உண்மை? அதன் உளவியல் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
கதைக்கான அடித்தளம் அதகளமான நகைச்சுவை என்றாலும் அதனை நீட்டி.. முழக்கி சொல்லி இருப்பதுதான் ரசிகர்களை சோதிக்கிறது. சைக்காலஜிக்கல் திரில்லராக தொடங்கிய படத்தை சிறிது நேர கால அவகாசத்திற்கு பிறகு திரில்லர் அம்சங்கள் இல்லாமல்... சுவாரசியம் இல்லாமல்.. சாதாரணமாக மெதுவாக பயணிப்பது தான் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்கிறது. ஆனால் அதனை ராவ் பகதூராக திரையில் தோன்றும் நடிகர் சத்ய தேவ் தன்னுடைய உடல் மொழியாலும், நடிப்பாலும் ரசிகர்களை வசப்படுத்துகிறார்.
இதற்கான திரை மொழி புதிதாக ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் எழுத்து அழுத்தமானதாக இல்லாமல் மேலோட்டமாக இருப்பதால் மௌனம்- பொறுமை- காக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு சில அற்புதமான திரையரங்க அனுபவங்கள் கிடைக்கிறது. அத்துடன் உச்சகட்ட காட்சியில் இயக்குநர் .. உரையாடல் மூலம் கதாபாத்திரங்களை நக்கலடித்திருப்பது புன்னகை பூக்க வைக்கிறது.
புவனம் ராமப்பா ராவ் பகதூர் மனைவி ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தீபா தாமஸின் திரை தோற்றம் 'ஜில்'.
டொக்டர் ஆச்சாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் விகாஸ் முப்பாலா திரையில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
அச்சம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பாலா பராசர் சில அற்புதமான திரையரங்க அனுபவத்தை தன் பிரத்யேக நடிப்பு திறமையால் வழங்கி சிரிக்க வைக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் ஆனந்த் - இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்.
படத்தின் நீளம் தான் மிகப்பெரிய மைனஸ். இயக்குநரே படத் தொகுப்பாளர் என்பதால் ஒவ்வொரு காட்சியின் நீளம் ரசிகர்களுக்கு சுவராசியத்திற்கு பதிலாக சோர்வை தருகிறது. 20 நிமிட காட்சிகளை தூக்கி இருக்கலாம்.
தங்களது வாரிசு குறித்த ஐயம் இன்றும் ஆண்களிடத்தில் நீடிக்கிறது என்ற எளிமையான விடயமாக இருந்தாலும்.. அதனை வித்தியாசமாக சொல்ல முயன்று, அதனை நேர்த்தியாக சொல்வதில் தோல்வியை சந்தித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அவரது புதிய பாணியிலான கதை சொல்லும் முயற்சியை பாராட்டலாம். இதற்காக நான் லீனியர் பாணியை கடைப்பிடித்திருந்தாலும்... பிளாஷ் பேக்... பிளாஷ்பேக்கிற்குள் மற்றொரு ஃபிளாஷ்பேக்... என வைத்திருப்பது சாதாரண ரசிகர்களை குழப்பம் அடையச் செய்யும்.
இதிகாசம் மற்றும் இந்திராகாந்தி காலகட்ட அரசியல் குறித்த விமர்சனத்தை உரையாடலாக இடம்பெற வைத்திருப்பதும் ரசிக்க முடிகிறது.
கலை இயக்குநர் -ஒளிப்பதிவாளர் - பின்னணி இசையமைப்பாளர் - ஆகிய இந்த மூவரும் ரசிகர்களுக்கு அற்புதமான திரை அனுபவத்தை வழங்குவதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
வெவ்வேறு தோற்றத்தில் தோன்றி ஒட்டுமொத்த திரைக்கதையும் தன் ஒற்றைத் தோளில் சுமந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான படைப்பு அனுபவத்தை வழங்கியிருக்கிறார் நடிகர் சத்யதேவ்.
ராவ் பகதூர் - ஆண்ட பரம்பரை














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM