இன்றைய சூழலில் எம்மில் பலரும் குறைந்த முதலீட்டில் வணிகம் செய்து அதில் லாபம் சம்பாதிப்பதை தான் விரும்புகிறார்கள். இதில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வருவாய் தடையில்லாமல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
சிலர் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து தங்களது தொழிலை உருவாக்கிக் கொள்வார்கள். வேறு சிலர் தங்களது தொழில் மூலம் வாடிக்கையாளர்களை வசீகரிப்பர்.
இந்த தருணத்தில் தொழில் என்பது நிலையில்லாத தன்மை வாய்ந்ததாக இருந்தாலும்... அதனூடாக கிடைக்கும் வருவாய் என்பது தடையின்றி கிடைக்க வேண்டும் என விரும்பினால்... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய வழிமுறையை உரைத்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : முருங்கை கீரை, ஸ்குரு டிரைவர், லட்டு ( மஞ்சள் வண்ணம்) சயன பெருமாளின் திருவுருவ புகைப்படம்.
முதலில் உங்களுடைய நாளாந்த உணவு பட்டியலில் அல்லது வாரத்திற்கு ஒரு முறையேனும் அல்லது இருமுறையேனும் முருங்கை கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரையை உணவுப் பொருளாக தயாரித்து பசியாற தொடங்கினால்... உங்களுடைய தொழில் மூலமாக கிடைக்கும் வருவாய் தடையின்றி கிடைத்து வரும்.
உங்களுடைய வீடு அல்லது விற்பனை நிலையங்களில் எப்போதும் ஸ்குருட்ரைவர் எனப்படும் மின் சாதன பொருட்களை பழுது நீக்குவதற்காக பாவிக்கப்படும் ஒரு உப கரணத்தை எப்போதும் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது உங்களது தொழிலில் கிடைக்கும் லாபத்தில் சிறு பகுதியை ஒதுக்கி, நாளாந்தம் மஞ்சள் வண்ணத்திலான லட்டு எனும் இனிப்பு பொருளை வாங்கி, மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து வர வேண்டும்.
உங்களது வீடு அல்லது விற்பனை நிலையத்திற்கு அருகே சயன கோலத்தில் ஆதிசேஷன் உடன் பெருமாள் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்யுங்கள் அல்லது அது போன்றதொரு திரு உருவ புகைப்படத்தை எப்போதும் உடன் வைத்திருங்கள்.
இதனை நீங்கள் தொடர்ச்சியாக பாவித்து வரும்போது... உங்களுடைய தொழிலில் இருந்து வருவாய் தடையின்றி கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM